This vacancy closed on 8 Jun 2026. The employer may no longer accept applications.
See similar jobs
About the role
Sri Lanka Customs Recruitment 2026 | Assistant Superintendent Grade II இலங்கை சுங்கத் திணைக்களம் – உதவிச் சுங்க அத்தியட்சகர் தரம் II திறந்த போட்டிப் பரீட்சை – 2026 Sri Lanka Customs is hiring! Complete guide for Assistant Superintendent of Customs Grade II Open Exam 2026. Download Gazette and apply online before June 8. 1. பதவியின் விபரங்கள் பதவிப் பெயர்: உதவிச் சுங்க அத்தியட்சகர் தரம் II (Assistant Superintendent of Customs Grade II) திணைக்களம்: இலங்கை சுங்கத் திணைக்களம் சம்பளத் திட்டம்: ரூபா 58,660 – 10×1,190 – 11×1,360 – 15×1,670 – 110,570 சம்பளக் குறியீடு: MN 5 – 2025 2. முக்கிய திகதிகள் விண்ணப்பம் ஆரம்பமாகும் திகதி: 2026.05.11 விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.06.08 (இரவு 9.00 மணி வரை) பரீட்சை நடைபெறும் காலம்: 2026 ஆகஸ்ட் மாதம் 3. தகுதிகள் (Eligibility Criteria) அ) வயது எல்லை: 2026.06.08 ஆம் திகதியன்று விண்ணப்பதாரர் 21 வயதுக்குக் குறையாமலும் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். (பிறந்த திகதி 1991.06.08 க்கும் 2005.06.08 க்கும் இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்). ஆ) கல்வித் தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் பெற்ற குறைந்தது 3 வருட காலத்தைக் கொண்ட ஒரு பட்டம் (Degree). ஆங்கில மொழித் தகைமை:(கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒரு தகைமை இருந்தால் போதும் ) க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் சம்பூர்ண சித்தி (Credit Pass – C). க.பொ.த (உயர்தர) பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் சாதாரண சித்தி (Simple Pass – S). இ) உடல் தகைமை: ஆண் விண்ணப்பதாரர்கள்: உயரம் 5 அடி 5 அங்குலத்திற்கு குறையக்கூடாது. மார்பளவு (விரிந்த நிலை) 33 அங்குலத்திற்கு குறையக்கூடாது. பெண் விண்ணப்பதாரர்கள்: உயரம் 5 அடி 3 அங்குலத்திற்கு குறையக்கூடாது. 4. பரீட்சை மற்றும் தெரிவு முறை விண்ணப்பதாரர்கள் இரண்டு வினாத்தாள்களைக் கொண்ட எழுத்துப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்:Geographic Reference திறனாய்வு (Aptitude Test): 100 புள்ளிகள் (1 மணித்தியாலம்). ஆங்கில மொழி (English Language): 100 புள்ளிகள் (1 ½ மணித்தியாலம்). 6. விசேட நிபந்தனைகள் தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும். நியமனம் பெற்றதிலிருந்து 3 வருடங்கள் தகுதிகாண் காலமாக கருதப்படும். துறவறம் பூண்டுள்ள எவரும் விண்ணப்பிக்க முடியாது. 7. நேர்முகப் பரீட்சைக்குத் தேவையான ஆவணங்கள் நற்சான்றிதழ் (Character Certificate) பிறப்புச் சான்றிதழ் கல்விச் சான்றிதழ்கள் அடையாள அட்டை (NIC) அல்லது கடவுச்சீட்டு
Full advertisement
The official notice as a PDF document.