Skip to main content

Education Co-operative Society (EDCS) Vacancies 2026

Education Co-operative Society (EDCS)

  • Colombo, Western
  • Full-time
  • Posted 16 Nov 2026
  • Closes in 1 day
Vacancy advertisement for Education Co-operative Society (EDCS) Vacancies 2026

About the role

கல்வி கூட்டுறவுச் சங்கம் (EDCS) ஆட்சேர்ப்பு 2026 | 444 பணியிடங்கள் | விண்ணப்பிக்க இறுதி நாள்: 26-11-2026 இலங்கையில் கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் அங்கத்துவத்தைக் கொண்டு இயங்கிவரும் வரையறுக்கப்பட்ட கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கம் (Education Co-operative Society – EDCS) தனது பிரதான காரியாலயம் மற்றும் நாடளாவிய கிளைக் காரியாலயங்களில் நிலவும் 416 பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.கல்விச் சேவைகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் இச்சங்கத்தின் கிளைக் காரியாலயங்கள் அமைந்துள்ளன. தகுதியும் ஆர்வமும் கொண்ட இலங்கைப் பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 📌 விரைவுச் சுருக்கம் (Quick Overview) நிறுவனம்: கல்வி கூட்டுறவுச் சங்கம் (EDCS) பதவிகள்: முகாமைத்துவ உத்தியோகத்தர், காசாளர், சாரதி உட்பட 19 பதவிகள் மொத்த வெற்றிடங்கள்: 416 பணியிடங்கள் அடிப்படை சம்பளம்: ரூபா 30,100/- முதல் ரூபா 46,200/- வரை (+ ரூபா 28,800 கொடுப்பனவு) வயது எல்லை: 18 – 45 வயது வரை விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் + Online பதிவு இறுதித் திகதி: 2026 நவம்பர் 26 பதவி விபரம் மற்றும் வெற்றிடங்கள் அட்டவணை இவ்வறிவித்தலின் கீழ் நிரப்பப்படவுள்ள பதவிகள், வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் சம்பள விபரம்: பதவிப் பெயர் வெற்றிடம் அடிப்படை சம்பளம் பிரதம பயிற்சி உத்தியோகத்தர் 01 46,200 – 575×10 மொழிபெயர்ப்பாளர் (சிங்களம்/தமிழ்) 01 46,200 – 575×10 விடுமுறை விடுதிப் பொறுப்பாளர் 04 46,200 – 575×10 பிரிவுத் தலைவர் (கணக்குகள்) 20 46,200 – 575×10 தொழில்நுட்ப உத்தியோகத்தர் 01 38,700 – 350×10 சேவை மேம்படுத்தல் உத்தியோகத்தர் 28 38,700 – 350×10 வரைகலை வடிவமைப்பாளர் (Designer) 01 38,700 – 350×10 தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT) 10 38,700 – 350×10 முகாமைத்துவ உத்தியோகத்தர் (கணக்குகள்) 129 38,700 – 350×10 முகாமைத்துவ உத்தியோகத்தர் (பொது) 98 38,700 – 350×10 காசாளர் (Cashier) 17 38,700 – 350×10 சமையற்கலைஞர் (Cook) 05 38,700 – 350×10 தொழில்நுட்பக் கைவினைஞர் 02 35,100 – 290×10 சாரதி (Driver) 03 35,100 – 290×10 அலுவலகப் பண உதவியாளர் 20 35,100 – 290×10 வரவேற்பு உத்தியோகத்தர் (Receptionist) 27 35,100 – 290×10 ஆவணக் காப்பாளர் (Record Keeper) 36 35,100 – 290×10 விடுமுறை விடுதி உதவியாளர் 08 33,500 – 250×10 தொழிலாளி (Labourer) 33 30,100 – 180×10 மொத்த வெற்றிடங்கள்: 444 சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பொது நிபந்தனைகள் மேலதிகக் கொடுப்பனவுகள்: மேலே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைச் சம்பளத்திற்கு மேலதிகமாக: வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: ரூபா 17,800/- அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு: ரூபா 11,000/- (அடிப்படைச் சம்பளத்துடன் கூடுதலாக ரூபா 28,800/- மாதாந்தம் வழங்கப்படும்). சேவை நிலை: இப்பணிகள் அனைத்தும் நிரந்தரமானவை (ஓய்வூதியமற்றவை). ஊழியர் சேமலாப நிதிக்கு (EPF) ஊழியர் 10% உம், நிறுவனம் 15% பங்களிப்பும் வழங்கும். வயது எல்லை: 2026-11-26 ஆம் திகதியன்று விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு உட்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (கூட்டுறவுச் சேவையில் ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது). விண்ணப்பிக்கும் முறை (How to Apply) ⚠️ மிக முக்கிய கவனிப்பு: விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்களை ஒப்படைப்பதுடன், கீழே வழங்கப்பட்டுள்ள லிங்க் (Link) மூலமாக Online முறையிலும் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். Online முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானதல்ல! உங்களால் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட சுயவிபரக் கோவை (CV) இணைக்கப்பட வேண்டும். கல்வி, தொழில் தகைமைச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் மற்றும் NIC ஆகியவற்றின் நிழற்பிரதிகளில் (Photocopies) “உண்மைப் பிரதி” எனத் தாங்களே கையொப்பமிட்டு சான்றுப்படுத்த வேண்டும். கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடவும். விண்ணப்பங்களை 2026-11-26 ஆம் திகதிக்கு முன்னர் போய்ச்சேரும் வகையில் பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கவும். அத்துடன் கீழே உள்ள இணைய இணைப்பை அழுத்தி கூகுள் ஃபார்ம் (Google Form) மூலமும் உங்கள் விபரங்களைச் சமர்ப்பிக்கவும். விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி: பிரதான தலைவர், வரையறுக்கப்பட்ட கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கம், இல. 294, காலி வீதி, கொழும்பு 03. தொலைபேசி இலக்கம்: 011-2266000

Requirements

  • O/L | A/L | டிப்ளோமா / பட்டம்